சினிமா செய்திகள்

காதல் பிரேக் அப் செய்த இலியானா!

Published

on

நடிகை இலியானாவுக்கும் அவரது காதலரான ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூவ் நிபோனுக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளது.

கேடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இலியானா, அடுத்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பின்னர், பாலிவுட் உலகில் கால் பதித்து பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நாயகியாக மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

பின்னர், மீண்டும் பாலிவுட் படங்களில் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த இலியானாவுக்கு ஆஸ்திரேலிய புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவுடன் காதல் மலர்ந்தது.

இருவரும் எடுத்துக் கொள்ளும் ஹாட் செல்ஃபி புகைப்படங்களையும், முத்தக் காட்சி புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இலியானா பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது, அந்த புகைப்படங்களை டெலிட் செய்துள்ள இலியானா, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லவ் பிரேக்கப் நிகழ்ந்ததாகவும் மறைமுகமாக கருத்து பதிவிட்டு தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version