வணிகம்

அதிர்ச்சி.. ஜிஎஸ்டி வரி உயர்வு!

Published

on

லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் லட்டரி டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால், விற்கப்படும் லாட்டரி டிக்கெட்களுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது. அதில் 14 சதவீதம் மத்திய அரசுக்கும், 14 சதவீதம் மாநில அரசுக்கு கிடைக்கும்.

சூதாட்டம் என்று கூறப்படும் லாட்டரி சீட்டுகள், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கலில் லாட்டரி டிக்கெட்கள் 12 சதவீத வரியுடன் சட்டப்பூர்வமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version