இந்தியா

2 வருடம் பாலியல் இன்பம் இல்லை.. அரசிடம் ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்கும் இளைஞர்!

Published

on

தவறான குற்றச்சாட்டு காரணமாக தன்னை சிறையில் இரண்டு வருடம் சிறையில் அடைத்ததால் தனக்கு பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என கூறி ரூ.10 ஆயிரம் கோடி நஷ்ட ஈடு கேட்டு இளைஞர் ஒருவர் அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கண்டிலால் பீல் என்ற 35 வயது நபர் ஒருவர் கூட்டு பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டு போலியானது என்று நிரூபணமானதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தனது விடுதலையை தான் பெரிதாக நினைக்கவில்லை என்றும் தான் சிறையில் இருந்த இந்த இரண்டு ஆண்டுகளையே பெரிதாக கருதுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக தனக்கு தொழிலில் ஏற்பட்ட இழப்பு, மரியாதைக்குறைவு, இழந்த சொந்தங்கள், உடல்ரீதியாக அனுபவித்த வேதனைகள் குறிப்பாக பாலியல் உறவில் ஈடுபட முடியாத நிலை ஆகியவற்றுகாக தனக்கு அரசு பத்தாயிரம் கோடி இழப்பீடு தரவேண்டும் என்று அவர் கூறி உள்ளார்.

எனது குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருந்தேன் என்றும் இரண்டு வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டதால் எனது வயதான தாய், எனது மனைவி மற்றும் குழந்தைகள் கடும் வேதனைக்கு உள்ளாகினர் என்றும் அந்த வலியை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது என்றும் நான் சரியான உடைகள் கூட இல்லாமல் சிறையில் துன்பமான வாழ்க்கை வாழ்ந்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீசார் வேண்டும் என்றே போலியான வழக்கை ஜோடித்து என்னை சிறையில் தள்ளியுள்ளனர் என்றும் என் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சிதைத்து விட்டனர் என்றும் கூறிய அவர் எனக்கு ஏற்பட்ட இழப்புக்காக பத்தாயிரம் கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசித்திரமான வழக்கின் விசாரணை எப்படி இருக்கும்? இந்த வழக்கின் தீர்ப்பை தீர்ப்பு எப்படி இருக்கும்? என்பதை அறிய நாடே காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போலியாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் இரண்டு வருடங்கள் வாழ்க்கையை தொலைத்து இருக்கும் நிலையில் அவரது இழப்புக்கு ஈடு செய்ய முடியாத தொகை கொடுக்க வேண்டியது அவசியம் என பல நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version