ஆரோக்கியம்

இப்படி செஞ்சா என்ன சாப்டாலும் எடை குறைக்க முடியுங்க – ஹெல்த் டிப்ஸ்!

Published

on

உடல் பருமனான பின்னர் எடை குறைப்பு என்பது மிகப் பெரிய சவாலாக பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கும். குறிப்பாக நன்றாக சாப்பிடக் கூடியவர்களுக்கும், வித்தியாசமான உணவுகளை முயற்சி செய்பவர்களுக்கும் எடை குறைப்பு என்பது மிகக் கடினமான விஷயமாக இருக்கும்.

நன்கு சாப்பிடுதல், கொழுப்பு அல்லது சர்க்கரை நிறைந்த உணவை உட்கொண்ட பின்னரும் எடையைக் குறைக்க முடியும். அதற்குச் சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

இது குறித்து நமக்கு டிப்ஸ் தருகிறார் ஊட்டச்சத்து வல்லுநர் மாமி அகர்வால், ‘சாப்பிடுவதில் ஒரு சில விஷயங்களை மாற்றினாலே நாம் எடை குறைப்பில் ஒரு படியை எடுத்து வைக்க முடியும்.

ஒவ்வொரு முறையும் குறைவான அளவு உணவை வாய்க்கு எடுத்துச் செல்வது, மெதுவாக சாப்பிடுவது, உணவு உட்கொள்ளும் போது அதில் மட்டும் கவனம் வைப்பது உள்ளிட்ட காரியங்களை செய்வதன் மூலம் சரியான, தேவையான அளவு உணவை மட்டும் சாப்பிட முடியும்.

அதைத் தவிர்த்து பீட்சா அல்லது கொழுப்புச் சத்து நிறைந்த உணவை எதாவது ஒரு வேளை உட்கொள்வது என்பது தவறல்ல. அதே நேரத்தில் தொடர்ந்து அடுத்த வேளையும் அப்படியான உணவை எடுத்துக் கொள்ளாதீர்கள். சத்து நிரம்பிய, உடலுக்கு ஊட்டச் சத்துகள் கொடுக்கிற உணவை சாப்பிடுங்கள். இப்படி ஒரு வேளை ருசிக்காகவும், ஒரு வேளை உடலுக்காகவும் பிரித்துக் கொண்டால் எடை குறைப்பையும் வெற்றிகரமாக செய்யலாம்’ என அட்வைஸ் கொடுக்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version