ஆரோக்கியம்

இந்த உடற்பயிற்சியை தினமும் 20 நிமிடம் மட்டுமே செய்து தொப்பையை குறைங்க..!

Published

on

சின்ன வயதில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டே இருந்ததால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு கொழுப்பு, தொப்பை போன்றவைகள் எல்லாம் என்னவென்றே தெரிந்திருக்காது. ஆனால், வயது கூட கூட, மாறி வரும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப நாமும் மாறிப் போவோம். உடல் உழைப்பு குறையும், கணினி முன்பு மணிக் கணக்கில் அமர்ந்து பணி செய்வதால் உடல் பருமன் அதிகரிக்கும்.

இப்படி அதிகரிக்கும் உடல் பருமைக் குறைக்க நாமும் பல முயற்சிகள் எடுத்துத் தோற்றிருப்போம். ஆனாலும், நம் ஆழ் மனதில் மீண்டும் விடா முயற்சியுடன் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு உடல் கொழுப்பையும் குறிப்பாக தொப்பையையும் குறைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும்.

அப்படி தொப்பையைக் குறைக்க ஒரு நாளில் அதிக நேரம் செலவிட வேண்டாம். அதிகபட்சம் 20 நிமிடங்கள் செலவு செய்து, தினமும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை செய்து வந்தாலே போதும், மாற்றத்தை விரைவில் உணரலாம்.

உலக புகழ் பெற்ற கெய்லா இட்சைன்ஸ் என்னும் உடற்பயிற்சி நிபுணர், தொப்பையைக் குறைக்க சுலபமாக செய்யக் கூடிய 20 நிமிட வொர்க்-அவுட் ருட்டீன் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைக் காண்க:

Straight-Leg Raise – 15 reps
Flutters – 30 reps
X Mountain Climbers – 20 reps
Hip Lift – 15 reps
Bent Leg Raise – 20 reps
Scissors – 30 reps

மேலே கொடுக்கப்பட்டு வீடியோவில் வரும் உடற்பயிற்சிகளை மூன்று முறை ரிப்பீட் செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்து விரைவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்த வாழ்த்துகள்.

Trending

Exit mobile version