சினிமா

விஜயலட்சுமி ஐஸ்வர்யாவை குமுறிக் குமுறி அழ வைக்கிறார் பாருங்கள்(வீடியோ)

Published

on

பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் பொதுமக்கள் வெகுநாட்களாக ஆர்வமாகக் காத்திருந்த ஐஸ்வர்யா எவிக்‌ஷன் பிராசஸ் இந்த வாரம் நெருங்குகிறது.

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கியக் காரணம் விஜயலட்சுமி வருகை தான்.

ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார்.

இந்நிலையில் விஜயலட்சுமி அருமையாகப் பேசிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

உங்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றித் தெரியுமான்னு தெரியாது. பிடித்துவிட்டால் தலையில் தூக்கி வைத்து ஆடுவாங்க. ஆனால் முட்டாள் இல்லை என்று விஜயலட்சுமி ஐஸ்வர்யா, மும்தாஜ், சென்றாயனிடம் கூறினார். உடனே ஐஸ்வர்யா தம்மடிக்கும் அறையில் அமர்ந்து கொண்டு தமிழ் மக்கள் முட்டாள் இல்லே என்று கூறி அழும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததைக் கூறி அழுதேவிட்டார், ஆனால், விஜயலட்சுமி செம்ம ஜாலியாக இதை வெளியே கூறி அரட்டை அடித்தார்.

மும்தாஜ், ஐஸ்வர்யா, சென்றாயனை மட்டும் தனி இடத்தில் வைத்துப் பேசியுள்ளார் விஜி. அப்படி என்றால் அவர்கள் 3 பேர் தான் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளார்களா?. ஐஸ்வர்யா நாமினேட் ஆவதற்காகத் தான் பார்வையாளர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version