தமிழ்நாடு

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா?

Published

on

லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் உலகம் முழுவதும் 24 நாடுகளில் பரவி உள்ளதாகவும், மேலும் சில நாடுகளில் மிக விரைவில் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் பெங்களூரைச் சேர்ந்த 5 பேருக்கு ஏற்கனவே ஒமிக்ரான் பாதிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 8 பேர் கொண்ட குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 8 பேர்களும் கிண்டி கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எட்டு பேர்களையும் மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும், கொரோனா தொற்று உறுதியான இரண்டு பேர்கள் தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கொரோனா உறுதி செய்யபப்ட்ட இரண்டு பேர்களுக்கு ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதா என்பதை கண்டறிய மரபணு வரிசை பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதன் முடிவு வரும் என்றும் கூறப்படுகிறது. லண்டனில் ஏற்கனவே ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல பேருக்கு பரவியுள்ள நிலையில் அங்கிருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version