சினிமா செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல இயக்குனர்: ஓட்டு போட்டதாகவும் அறிவிப்பு!

Published

on

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு இன்று ஓட்டு போட்டதாக தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் உள்பட ஒருசில படங்களை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சற்று முன் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார். அதில்தான் கொரோனாவால் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனாவில் இருந்து குணமாகியதை அடுத்து தான் இன்று ஓட்டு போட்டதாகவும் அவர் குறிப்பிட்டு ஓட்டு போட்ட விரல்களுடன் கூடிய புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மாஸ்டர் படத்திற்குப் பின் கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version