சினிமா செய்திகள்

சுமார்மூஞ்சி குமார் பகுதி 2 ஆக பங்கம் செய்ய வருகிறான் ‘கொரோனா குமார்’..!

Published

on

’கொரோனா குமார்’ திரைப்படம் இயக்குநரின் கோகுலின் அடுத்த ஹிட் காமெடி திரைப்படமாக அமையும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழில் ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்னும் ஹிட் திரைப்படத்தை அளித்தவர் இயக்குநர் கோகுல். நடிகர் விஜய் சேதுபதி மூலமாக சுமார்மூஞ்சி குமார் என்னும் கதாபாத்திரத்தை மிகவும் பிரபலமடையச் செய்தவர் கோகுல். தற்போது சுமார்மூஞ்சி குமாருக்கு அடுத்தபடியாக ‘கொரோனா குமார்’-ஐ அறிமுகம் செய்கிறார்.

அந்தப் படத்துக்கு சற்றும் சளைக்காத காமெடிகள் நிறைந்த படமாக கொரோனா குமார் இருக்கும் என கோகுல் தெரிவித்துள்ளார். இதற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜுன் கியாரண்டி அளித்துள்ளார். ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து கலக்கி இருப்பார். ஆனால், கொரோனா குமார் திரைப்பட நாயகன் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கெளரவ கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வருவார் எனத் தெரிகிறது.

Trending

Exit mobile version