சினிமா செய்திகள்

கமல் – லோகேஷ் கனகராஜ் புதிய பட போஸ்டரும் காப்பியா?

Published

on

உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டர் நேற்று மாலை வெளியானது.

இந்நிலையில் அந்த போஸ்டர் எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவலை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களீல் வெளியிட்டுள்ளனர்.

இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியதில் இருந்து தமிழ் சினிமாவில் புதிய அப்டேட் வந்தாலும், அது ஏதாவது ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவல் தெரிந்தால் உடனே அதை டிரெண்டாக்கி விடுகின்றனர்.

அப்படி ரஜினிகாந்த் நடிக்க, கமல் தயாரிக்க இருந்த படத்தை இப்போது கமல் ஹாசனே நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரில் கமலின் உருவம் துப்பாக்கியால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஜேசன் ஸ்டேத்தம் நடிப்பில் உருவான மெக்கானிக் படத்தின் போஸ்டரை தழுவி உருவாக்கி உள்ளனர்.

போஸ்டர் காப்பியாக இருந்தாலும், லோகேஷ் கனகராஜ் படத்தை காப்பியடிக்காமல் சுவாரஸ்யமாக உருவாக்குவார் என்று எதிர்பார்ப்போம்.

ராஜ் கமல் பிளிம்ஸ் சார்பில் கமல் தயாரித்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version