உலகம்

சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமர்.. அட போங்க.. கலாய்த்த அமித்ஷா!

Published

on

டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைத்தால் தினம் ஒரு பிரதமரை இந்த நாடு சந்திக்கும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

பாஜகவிற்கு எதிராக நிறைய எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து லோக்சபா தேர்தலில் பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. திமுக, காங்கிரஸ் என்று பல எதிர்க்கட்சிகளின் ஒன்றாக சேர்ந்து பெரிய கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் இந்த கூட்டணிக்கு பெரிய வெற்றிவாய்ப்பு உள்ளது என்று கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது. ஒருவேளை இந்த கூட்டணி உருவாகாமல் முத்தரப்பு போட்டி நிலவினால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்றும் கூறுகிறார்கள்.

அமித் ஷா பேட்டியில், அப்படியே எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தினம் ஒரு பிரதமர் ஆட்சிக்கு வருவார். திங்கள் கிழமை மாயாவதி, செவ்வாய் அகிலேஷ் யாதவ், புதன் மமதா பானர்ஜி, வியாழன் சரத்பவார், வெள்ளி தேவ கவுடா, சனிக்கிழமை ஸ்டாலின் ஆகியோர் ஆட்சிக்கு வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கே விடுமுறை அளிக்க வேண்டியதுதான் என்று அமித் ஷா கிண்டலாக கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version