இந்தியா

தங்களைத் தானே சாப்பிட்டு வாழும் வெட்டுக்கிளிகளிடம் இருந்து விளை பயிர்களை காப்பாற்றவே முடியாதா?

Published

on

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் ஒரு காட்சி வரும் தஞ்சை மாவட்ட விவசாய நிலங்களின் பெரும்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அழிப்பது போன்று. அதனால் விவசாயிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவது போன்றும். அது வெறும் கற்பனை அல்ல. தற்போது உலக நாடுகளில் மட்டுமல்லாது இந்தியாவின் ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட பல்வேறு வட மாநில விவசாய நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் அழித்து வருகின்றன. பார்க்க சாதுவாக இருக்கும் வெட்டுக் கிளிகளால் இன்று உலக நாடுகள் பல பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன. கொரோனாவைக் கூட கட்டுப்படுத்திவிடலாம் போல. ஆனால், இந்த வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது என்ற நிலையில் இன்று உலகம் இருக்கிறது.

வெட்டுக்கிளிகளால் விவசாய நிலம் பாதிக்கப்படுவது என்பது எகிப்தின் பிரமிடுகள் தோன்றிய காலம் தொட்டே நடந்து வருகிறது. வெட்டிக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் பூமியின் 20 % நிலப்பரப்பை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. உலக மக்களின் வாழ்வாதாரத்தை 10 %க்கும் அதிகமாக பாதிக்கிறது. குறைந்தது ஒரு நாளைக்கு 200 டன் தாவரங்களை உணவாக எடுத்துகொள்கிறது என்றால் அதன் தீவிரத்தை ஆபத்தை உணர்ந்துகொள்ளுங்கள். அப்படியானால் ஒரு கூட்டத்தில் எத்தனை வெட்டுக்கிளிகள் இருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளுங்கள்.

வெட்டுக் கிளிகள் வெறும் தாவரங்களை மட்டும் உண்பவை அல்ல. அவை தங்களைத் தாங்களே உண்ணும் ஒரு மாமிச உண்ணிகளும் கூடத்தான். கேட்கவே கொஞ்சம் அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது இல்லையா? ஆனால், அது தான் உண்மை. வெட்டுக் கிளிகளின் கூட்டம் ஒரே நேரத்தில் இரு வேறு நாடுகளில் உள்ள கூட்டங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளும் அளவுக்கு திறன் வாய்ந்தவை. அப்படி தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளாமல் அவைகளால் இனப்பெருக்கத்தை செய்ய முடியாது என்கிறது ஒரு ஆய்வு.

வெட்டுக் கிளிகளின் கூட்டங்களை கட்டுப்படுத்த சில வழிமுறைகள் சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

வெட்டுக்கிளிகள் இருக்கும் பகுதிகளில் விமானங்களை தாழ்வாகப் பறக்க விட்டு அந்த சத்தத்தின் மூலம் அவற்றை அழிக்க முடியும் என்கிறது ஒரு ஆய்வு. வெட்டுக்கிளிகளுக்குள் இருக்கும் தொடர்பை அழிக்கும் வகையில் அவை பறக்கும் இடங்களில் டயர்களை எறிப்பது, பள்ளங்கள் தோண்டுவது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றலாம். ஆனால், இந்த முயற்சிகள் அவற்றைக் கட்டுப்படுத்த ஓரளவே பயன்படும் என்கின்றன.பூச்சிக்கொல்லிகளை தெளித்து அவற்றை தடுக்கலாம் என்றாலும் இது சுற்றுச்சூழலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதுவும் ஆபத்தான ஒன்றுதான்.

இவையெல்லாம் இருக்க இன்று தமிழக அரசும் வெட்டுக்கிளிகள் தமிழகத்தில் வராமல் இருக்க வந்தால் தடுப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பயிர்ப்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லிகளை தெளிக்கலாம். மாலத்தியான் மருந்தினை தெளிப்பான்கள் மற்றும் பெரிய டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் தெளிக்கலாம். உயிரியல் கட்டுப்பாட்டு காரணியான பெட்டாரைசியன் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம், வெட்டுக்கிளிகளை உண்ணும் கோழி உள்ளிட்ட பறவைகள் மற்றும் விலங்குகளையும் கட்டுப்பாட்டு பணியில் பயன்படுத்தலாம். அரசு அனுமதி மூலம் விமானம் மூலம் பூச்சிக் கொல்லிகளை விமானம் மூலம் தெளிக்கலாம் என பல்வேறு அறிவுரைகளை இன்று தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த வெட்டுக்கிளிக் கூட்டங்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே இதற்கு ஒரு சிறந்த மருத்து ஆகும். ஆனால், மூன்றே மூன்று வெட்டுக்கிளிகள் மட்டுமே ஒரு கோடிக்கணக்கான வெட்டிக்கிளிகள் அடங்கிய கூட்டத்தை உருவாக்கப் போதுமானது என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்….

https://seithichurul.com/life-style/natural-ways-to-protect-plants-crops-and-grains-from-grasshoppers-locusts-in-tamil/22974/

Trending

Exit mobile version