தமிழ்நாடு

மறு அறிவிப்பு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு தொடரும்: தமிழக அரசு

Published

on

தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு அன்று முழுநேர ஊரடங்கும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு எப்பொழுது வரை நீடிக்கும் என்பது குறித்த தகவலை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது

இதன்படி தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றும் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

ஞாயிறு முழு ஊரடங்கு அன்று உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி, பகல் 12 மணி முதல் 3 மணி, மாலை 6 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பார்சலுக்கு அனுமதி என்றும் இறைச்சி கடைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் மே 2ஆம் தேதி ஊரடங்கு இருந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் எந்தவித தடங்கலும் இருக்காது என்றும், வேட்பாளர்கள் முகவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மே 2ஆம் தேதி அன்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், முகவர்கள் தாராளமாக சென்று வரலாம் என்றும் அவர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் பணியிலும் ஈடுபடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version