செய்திகள்

ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு?…தமிழக அரசு ஆலோசனை….

Published

on

தமிழகத்தில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. நேற்று ஒரு நாளில் கிட்டத்தட்ட 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் சுமார் 6 ஆயிரத்து 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே, தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது. ஒருபக்கம் பொங்கல் விடுமுறைக்கு பின் கட்டுப்பாடுகள் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜனவரி 31ம் தேதி வரை இரவு நேர நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வருகிற 16ம் தேதியும் முழுமுடக்கம் அமல்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அன்று உழவர் திருநாள் என்பதால் அரசு என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version