தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் அறிவிப்பு!

Published

on

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்

ஜூலை 31 ஆம் தேதி வரையிலான ஊரடங்கில் தியேட்டர்கள் நீச்சல் குளங்கள் திறக்க தடை தொடர்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு போக்குவரத்துக்கான தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாடு பகுதிகள் தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடரும் என்றும் பள்ளி கல்லூரிகள் திரையரங்குகளுக்கு தடை தொடரும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்

மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு, விளையாட்டு கலாச்சார நிகழ்வுகள் உயிரியல் பூங்காக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் இறுதி சடங்குகளில் 20 பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்கள், தட்டச்சு சுருக்கெழுத்து பயிற்சி நிறுவனங்கள், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

இதுகுறித்து தமிழக அரசு அறிவித்துள்ள முழு விபரங்கள் இதோ:

seithichurul

Trending

Exit mobile version