இந்தியா

ஊரடங்கு தொடருமா? தொடராதா? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல,

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு விதித்து இருந்த 21 நாட்கள் ஊரடங்கு 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அணைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று நடைபெறும் இந்த காணொலி கலந்துரையாடலில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவைப் பிரதமர் மோடி எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது, ஊரடங்கை முழுமையாக நீக்கிவிடுவது சாத்தியமல்ல என்று குறிப்பிட்டு இருந்ததாகத் தகவல்கள் தெரிவித்தன.

எனவே படிப்படியாகவே ஊரடங்கு தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கை நீட்டிக்கும் முன்பு எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் முதலமைச்சர்களிடம் மோடி விவாதிப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு முன்பும், இரண்டு முறை பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று இரவு 8 மணிக்கு மக்களிடையில் உரையாற்றும் மோடி தெரிவிப்பார் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

நெற்றுச் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன், ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முக்கிய அறிவிப்பைப் பிரதமர் மோடி சனிக்கிழமை தெரிவிப்பார். மீண்டும் 21 நாட்கள் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version