இந்தியா

மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

Published

on

தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது

இந்தியா முழுவது 45 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்றால் அதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 25 ஆயிரம் பேர்களுக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாக்பூர் உள்பட பல நகரங்களில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பீட் என்ற ஒரு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கொரொனா தொற்று அதிகரிப்பு காரணமாக மாறாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பீட் என்ற மாவட்டத்தில் வரும் 26ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து வீட்டைவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசியமான காரணங்களுக்காக வெளியே வந்தால் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version