இந்தியா

ஊரடங்கு 3.0: சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்களில் என்னவெல்லாம் கிடைக்கும்.. கிடைக்காது?

Published

on

கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே 18-ம் தேதியுடன் முடிவுக்கு வரும். இந்த ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வரும் போது, கொரோனாவின் தாக்கத்தைப் பொருத்து மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற அறிவிப்பு வெளியாகும்.

அதே நேரம் ஊரடங்கு 3.0-ல் சிவப்பு, மஞ்சள், பச்சை என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அவற்றில் என்னவெல்லாம் செய்யலாம் என்ற வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது.

சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

பச்சை மண்டலம்: இதுவரை கொரோனா வைரஸ் தாக்காத பகுதிகள் மற்றும் கடந்த 21 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் இல்லாத பகுதிகள்.

சிவப்பு மண்டலம்: தொடர்ந்து கோரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதிகள்.

மஞ்சள் மண்டலம்: கொரோனாவின் தாக்குதல் அதிகளவில் இல்லாமல் உள்ள பகுதிகள்.

அனைத்து மண்டலங்களுக்கும் பொதுவானவை

1. விமானம், ரயில், மெட்ரோ, சாலை பொது போக்குவரத்து சேவைகள் கிடையாது.
2. பள்ளி, கல்லூரி, கோச்சிங் செண்ட்டர் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் எதுவும் செயல்படாது.
3) ஹோட்டல், ரெஸ்டாரண்ட், சினிமா, ஹால், மால், விளையாட்டு மைதானங்கள் எதுவும் இயங்கக் கூடாது.
4) வழிப்பாட்டு தளங்கள் எதிலும் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.
குறிப்பு: பொது போக்குவரத்து சேவைகளை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற சில காரணங்களுக்காக மட்டும் மத்திய அரசு அனுமதியுடன் செயல்படும்.

சிவப்பு மண்டலம்

1) சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா, டாக்ஸி, கேப், பேருந்து போன்ற எந்த சேவைகளுக்கும் அனுமதி கிடையாது.
2) அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிற பிற கடைகள் எதுவும் திறக்க அனுமதி கிடையாது.
3) முடி திருத்தங்கள், அழகு நிலையங்கள், சலூன் போன்றவற்றுக்கு அனுமதியில்லை.
4) காரில் அதிகபட்சம் 3 நபர்களும், பைக் என்றால் ஒருவர் மட்டுமே கட்டுப்பாடுகளுக்கு அடங்கி பயணம் செய்ய அனுமதி.
5) சிறப்புப் பொருளாதார மையங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்றவை செயல்பட அனுமதி கிடையாது.
6) மருந்து, பால், காய்கறி, மளிகை பொருட்கள் போன்ற சேவைகளுக்கு அனுமதி.
7) ஐடி வன்பொருள் மற்றும் பைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்குச் சமுக இடைவெளி, பாதுகாப்பு வசதிகள் போன்ற கட்டுப்பாடுகளுடன் அனுமதி.
8) புறநகர்ப் பகுதிகள் உள்ளூர் கட்டட தொழிலாளர்களுடன் பணிபுரிய அனுமதி உண்டு.
9) அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் இ-காமர்ஸ் சேவைகள் அனுமதி.
10) தனியார் அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். வீட்டில் பணிபுரிய எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
11) அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் செயல்படலாம்,
12) ஐடி, ஐடி சார்ந்த சேவைகள், கால் செண்ட்டர், உணவு பதப்படுத்தும் இடங்கள், தனியார் காவலர் சேவைகள், சேமிப்பு கிடங்குகள் போன்றவற்றுக்கு அனுமதி உண்டு.

மஞ்சள் மண்டலம்

1) டாக்ஸி சேவைகள் ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு பயணிக்கு மட்டும் அனுமதி.
2) மாவட்டத்திற்குள்ளான பயனனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் பயணம் செய்யலாம்.
3) சொந்த கார்களில் 2 பயணிகள், ஒரு ஓட்டுநர் என்று 3 நபர்களுக்கு அனுமதி.
4) இரண்டு சக்கர வாகனங்களில் டபுள்ஸ் அனுமதி உண்டு.

பச்சை மண்டலங்கள்

1) சமுக இடைவேளியிடன் பெரும்பாலான சேவைகள் மற்றும் நிகழ்வுகளுக்கு அனுமதி.
2) பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம்.

seithichurul

Trending

Exit mobile version