தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: 4 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு!

Published

on

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதாகவும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் வாக்குச்சீட்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் கூறப்படுகிறது. 9 மாவட்டங்களில் வாக்குகள் எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின்படி  திமுகவை சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட 13வது கவுன்சிலராக புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 5வது வார்டு கவுன்சிலராக கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் தியாகதுருகம் ஒன்றிய கவுன்சிலராக செல்லம்மாள் மற்றும் நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்ப்பிடத்தக்கது. திமுகவைச் சேர்ந்த 4 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 2 மாவட்ட கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version