தமிழ்நாடு

5 திமுக வார்டு கவுன்சிலர்கள் வெற்றி: பல இடங்களில் முன்னிலை

Published

on

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் தேர்தலில் 5 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தபால் ஓட்டு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர்கள் இருவர் முன்னிலை பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தபால் ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்ததும் வாக்கு சீட்டு எண்ணிக்கை ஆரம்பித்த பிறகு திமுகவின் முன்னிலை நிலவரம் மேலும் அதிகரிக்கும் என அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்கள் திடீரென போராட்டம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் உள்ள அதிகாரிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி செய்யப்படவில்லை என கூறி வாக்கு எண்ணிக்கையில் நடத்த மாட்டோம் என போராட்டம் செய்து வருகின்றனர்.

அதேபோல் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் இதுவரை வாக்கு எண்ணிக்கை தோன்றவில்லை என்றும் ஏன் வாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை என்பதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள மற்ற அனைத்து பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது காலை 9 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

seithichurul

Trending

Exit mobile version