தமிழ்நாடு

தனித்து போட்டியிட்ட பாமக 6 தொகுதிகளில் முன்னிலை: அதிமுக நிலை பரிதாபம்!

Published

on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டால் பாமக கூட ஆறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக அமோகமாக இருந்த அதிமுக பெரும் பின்னடைவை இந்த தேர்தலில் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுகவின் 9 மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் 64 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவை பொறுத்தவரை ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் இருபத்தி மூன்று தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் ஆறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியாக அமோகமாக இருந்த அதிமுக வெறும் இருபத்தி மூன்று தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆறே மாதத்தில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version