தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை, சில நிமிடங்களில் முன்னிலை விபரம்!

Published

on

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தினங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது என்பதும் 27,002 பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 79,433 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4573 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின என்பதுவும் வாக்குப்பதிவுக்கு பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ண தொடங்கப்பட்டுவிட்டது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் முன்னணி நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கான வாக்குகளை எதற்காக தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருப்பதாகவும் முறைகேடுகள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிசிடிவி மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் பெருவாரியான வெற்றியை பெறுமா? அல்லது எதிர்க்கட்சியான அதிமுக வெற்றியை ருசிக்குமா? என்பதை இன்னும் ஒரு சில மணி நேரத்தில் பார்ப்போம்.

Trending

Exit mobile version