தமிழ்நாடு

சரத்குமார் மீது அதிருப்தியில் இருக்கும் கமல்ஹாசன்: என்ன காரணம்?

Published

on

சரத்குமார் மீது கமல்ஹாசன் அதிப்தியுடன் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியுடன் சரத்குமாரின் கட்சி கூட்டணி வைத்து 40 தொகுதிகளை பெற்றது. அதன் பின்னர் மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுத்து விட்டது. இந்த நிலையில் 37 தொகுதிகளை பெற்ற சரத்குமார் போட்டியிடாததும், மனைவி ராதிகாவும் போட்டியிடாததும் கமல்ஹாசனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது

அதுமட்டுமின்றி மூன்று தொகுதிகளில் சரத்குமார் கட்சியினர் சரியாக வேட்புமனு தாக்கல் செய்யாததால் அந்த தொகுதிகளில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் மூன்று தொகுதிகள் வீணானது. அந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு இருந்தாலும் நல்ல வாக்குகளை பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்குமார் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிலும் பேச்சாளர்கள் சுத்தமாக இல்லை என்பது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன், சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய மூவரை தவிர மக்களுக்கு தெரிந்த முகம் என்று யாரும் இல்லாததால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது

எனவே கிட்டத்தட்ட தேமுதிக போலவே மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்குமாரின் கட்சி இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version