தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கே பெரும்பான்மை- அடித்துச் சொல்லும் செல்லூர் ராஜூ

Published

on

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக இப்போதே பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக சட்ட மன்றத் தேர்தலின் போது இருந்த கூட்டணியானது, எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தொடரும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, திமுக பக்கம் இணைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல தேமுதிக, அமமுக கூட்டணி முறியும் எனப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் இன்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார் சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ. இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், ‘மதுரை மாநகருக்கு அதிமுக ஆட்சியின் போது பல்வேறு நலத் திட்டங்கள் செய்யப்பட்டன. மதுரையின் ஸ்மார்ட் சிட்டி மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

இப்படி மதுரைக்கு என்று பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செய்தது அதிமுக அரசு தான். இதையெல்லாம் மக்கள் இடத்தில் எப்படி எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்பது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது’ என்றுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version