இந்தியா

ராஜஸ்தான் தேர்தல்: BJPஐ பின்னுக்குத் தள்ளி கெத்து காட்டிய காங்கிரஸ்!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,775 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான இந்தத் தேர்தலில் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வாக்குப்பதிவு நடந்த இந்த தேர்தலுக்கு, நேற்று முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

மொத்தமுள்ள 1,775 கவுன்சிலர்கள் பதவிகளில், காங்கிரஸ் கட்சி 620 இடங்களையும் பாஜக 548 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. சுயேட்சைகள், 595 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலோட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அங்கு இன்னொரு முக்கிய தலைவராக இருக்கும் காங்கிரஸின் சச்சின் பைலட்டுக்கும் கெலோட்டுக்கும் இடையில் சில மாதங்களுக்கு முன்னர் மோதல் வெடித்தது. இந்த மோதலால் பைலட், பாஜகவில் இணைய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த உட்கட்சி சண்டை சுமுகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் உட்கட்சிப் பூசலுக்குப் பின்னர் நடந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜகவை விட அதிக இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version