தமிழ்நாடு

மாவட்ட கவுன்சிலர்: ஒரு இடத்தில் கூட அதிமுக முன்னிலை இல்லை: திமுக அமோகம்!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாவட்டத்தில் கூட மாவட்ட ஒன்றிய பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என ஏற்கனவே பத்திரிகைகள் கணித்திருந்த நிலையில் அந்த கணிப்பின்படி தற்போது முன்னிலை நிலவரம் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு மாவட்டத்தில் கூட மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் இல்லை என்பதும் அதிமுக போலவே மற்ற எந்த கட்சி வேட்பாளர்களும் முன்னிலையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் 9 மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு செங்கல்பட்டு திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 9 மாவட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 45 திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 68 திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னிலை நிலவரங்களை பார்க்கும்போது ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் அதிமுக உள்பட மற்ற அனைத்து கட்சிகளும் படு தோல்வியை தழுவும் என்றும் தெரியவருகிறது.

seithichurul

Trending

Exit mobile version