தமிழ்நாடு

13ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பா? அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு!

Published

on

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது என்பதும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை இந்த மாதத்திலேயே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறது என்பதும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையமும் தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியிடப்பட்டது என்பதும், அதில் பட்டியல் இன பெண்கள் மற்றும் பொது பிரிவு பெண்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தாமோதரன் அவர்கள் வரும் 13ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றும் கூறினார்.

அமைச்சரின் இந்த பேட்டி காரணமாக வரும் 13ஆம் தேதி தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனை அடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற வேண்டும் என்றும், ஆட்சியைப் பறிகொடுத்த அதிமுக உள்ளாட்சி தேர்தலில் நல்ல வெற்றியைப் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் விரைவில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version