தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு: களை கட்டும் தேர்தல் திருவிழா!

Published

on

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி ஊரக தேர்தல் விரைவில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், இட ஒதுக்கீடு போன்ற அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்பட்டது.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடனும் தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலை உள்ளாட்சி தேர்தல் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் தேர்தல் ஆணையம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் 9-ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் செப்டம்பர் 20 ஆம் தேதியுடன் வேட்புமனுதாக்கல் நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மீண்டும் தமிழகத்தில் உள்ள தேர்தல் திருவிழா ஆரம்பமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் உள்ளாட்சி தேர்தல் களப் பணிகள் விரைவில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version