தமிழ்நாடு

இனி ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்: ஆர்டிஓ அலுவலம் செல்ல தேவையில்லையா?

Published

on

ஓட்டுனர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும் ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில் தற்போது ஒரு சில பணிகளுக்கு மட்டும் இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக எல்எல்ஆர் பெற, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க, ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரியை மாற்ற ஆகியவற்றுக்கு இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டியதில்லை என்றும் அதை அனைத்தையும் ஆன்லைன் மூலமே மாற்றிக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்து துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் அதே நேரத்தில் எல்எல்ஆர் பெற்றவர்கள் ஓட்டுனர் உரிமை பெறும் போது கண்டிப்பாக போக்குவரத்து அலுவலகம் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்பட முக்கிய பணிகளுக்கு இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு வர வேண்டி இல்லை என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

ஆதார் அட்டையை அடையாளமாக பயன்படுத்தி போக்குவரத்து துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் வராமல் எல்எல்ஆர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version