தமிழ்நாடு

எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை மூட திடீர் உத்தரவு: அடுத்தது என்ன?

Published

on

அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளை மூட அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டன. அங்கன்வாடி வகுப்புகளில் நடத்தப்படும் மழலையர் வகுப்புகளுக்கு பதிலாக எல்கேஜி யுகேஜி அரசு பள்ளிகள் தொடங்கப்பட்டதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டு முதல் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கை இல்லை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக ஏற்கனவே இருந்த படி சமூகநிலை நலத்துறை மூலம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் சேர்க்க ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்த நிலையில் அரசு பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து பெற்றோர்கள் பயனடைந்தனர்

ஆனால் தற்போது எல்கேஜி யுகேஜி வகுப்புகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

 

seithichurul

Trending

Exit mobile version