சினிமா செய்திகள்

எல்கேஜி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Published

on

சென்ற வாரம் வெளியான திரைப்படங்களில் ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவல்களும் கிடைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை எல்கேஜி, டூலெட் மற்றும் கண்ணே கலைமானே என மூன்று திரைப்படங்கள் வெளியானது.

அதில் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகியுள்ள எல்கேஜி திரைப்படம் வணிகரீதியாகவும் நல்ல வசூலைச் செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எல்கேஜி

அரசியல், நையாண்டி திரைப்படமான எல்கேஜி உள்ளூர் அரசியல் முதல் தேசிய அரசியல் வரை அனைவரையும் கலாய்த்துள்ளது.

எல்கேஜி திரைப்படம் வெளியான தினத்தன்று மட்டும் 2.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் வார இறுதி நாட்களில் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்கேஜி திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 32 லட்சம் ரூபாயும், சனிக்கிழமை 51 லட்சம் ரூபாயும் வசூலித்துள்ளது. இளம் நடிகர்கள் பலருக்கும் இல்லாத அதிகாலை காட்சியின் இந்தத் திரைப்படத்திற்காக வழங்கப்பட்டு இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version