சினிமா செய்திகள்

அமெரிக்காவில் இத்தனை இடங்களில் எல்.கே.ஜி படம் வெளியாகிறது!

Published

on

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவா? பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியா? அதிகாலை 5 மணிக்கே முதல் காட்சியா? என ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி பட அறிவிப்புகளை பார்த்து விஷ்ணு விஷால் மட்டும் அல்ல பலரும் பொறாமை அடையத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில், எரிகிற கொல்லியில் மேலும் பெட்ரோலை ஊற்றும் விதமாக, எல்.கே.ஜி படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், 25 இடங்களில் உள்ள தியேட்டர்களில் எல்.கே.ஜி திரையிடப்படும் திரையரங்க விவரங்கள் உள்ளடங்கிய பட்டியலை எல்.கே.ஜி படக்குழு தற்போது வெளியிட்டு மேலும் பலரை பொறாமை பெறச் செய்துள்ளது.

வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் நிறுவனம் ஐசரி கணேஷ் இயக்கத்தில் அறிமுக இயக்குநர் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள எல்.கே.ஜி திரைப்படம் நாளை காலை ரிலீசாகிறது.

அரசியல் சட்டையர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆளுங்கட்சி முதல் மத்திய அரசை ஆளும் பாஜக வரை கழுவி ஊற்றி படக்குழு வெளியிட்ட டீஸர் வைரலானதை தொடர்ந்து, இந்த படத்திற்கான வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version