தமிழ்நாடு

அதிமுக தான் நம் பின்னால் வந்து கொண்டிருக்கின்றது: எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு!

Published

on

நாம் அதிமுகவை தேடிச் செல்லவில்லை என்றும் அதிமுகதான் நம்மை தேடி பின்னால் வந்து கொண்டிருக்கிறது என்றும் தேமுதிகவின் சுதீஷ் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? இடம்பெறாதா? என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்து இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியபோது தேமுதிக கேட்ட தொகுதிகளில் இருந்து பாதிக்கும் குறைவாகவே அதிமுக தருவதாக கூறியது. அதுமட்டுமின்றி தேமுதிகவின் கோரிக்கையான ராஜ்யசபா தொகுதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறும் நிலை ஏற்பட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எல்.கே.சுதீஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் நாம் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியை இருந்திருக்காது என்றும் கூட்டணிக்காக அவர்களை தேடி நாம் செல்ல வில்லை என்றும் அவர்கள் தான் நம் பின்னாடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பேசியுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காத நிலையில் தேமுதிக இவ்வாறு பேசியிருப்பது அந்த கட்சியின் அழிவை காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version