தமிழ்நாடு

ஷங்கர் மகளுடன் டாக்டர் பட்டம் பெற்ற விஜய்காந்த் உறவினர் மகள்: வைரல் புகைப்படம்!

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நேற்று டாக்டர் பட்டம் பெற்றார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவான நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டாக்டர் பட்டம் பெற்ற அதிதி ஷங்கருக்கு திரையுலகினர் மற்றும் உற்றார் உறவினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷங்கர் மகளை அடுத்து விஜயகாந்தின் உறவினர் மகளும் அதே பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜயகாந்தின் மச்சான் எல்.கே. சுதீஷ் அவர்கள் தேமுதிக கட்சியின் நிர்வாகி என்பதும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பதும் தெரிந்ததே.

இவரது மகள் ஜானுஸ்ரீ சுதீஷ் என்பவரும் மருத்துவ படிப்பை முடித்துள்ளதை அடுத்து சென்னை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் நேற்று டாக்டர் பட்ட சான்றிதழை பெற்றுக் கொண்டார். அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பட்டத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் எல்கே சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் பட்டம் பெற்ற எல்.கே. சுதீஷின் மூத்த மகள் ஜானுஸ்ரீ சுதீஷ் தனது தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version