தமிழ்நாடு

பாடப்புத்தகங்களில் இனி ஒன்றிய அரசு என்றே இருக்கும்: திண்டுக்கல் ஐ லியோனி அதிரடி

Published

on

2022ஆம் ஆண்டு முதல் இனி பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று தான் இருக்கும் என திண்டுக்கல் ஐ லியோனி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் பாட புத்தகங்களில் மத்திய அரசு என்ற பெயர் இனி ஒன்றிய அரசு என மாற்றப்படும் என்றும் 2022 முதல் புத்தகங்களில் ஒன்றிய அரசு என்ற இடம்பெறும் என்றும் சற்றுமுன் பேட்டியளித்த திண்டுக்கல் ஐ லியோனி கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே திமுக உள்பட ஒரு சில அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. அதேபோல் மத்திய அமைச்சர்களை ஒன்றிய அமைச்சர்கள் என்றே தெரிவித்து வருகின்றனர். இதற்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திலேயே ஒன்றிய அரசு என்றுதான் அழைப்போம் என்று உறுதிபடக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியல் பள்ளி பாடப்புத்தகங்களில் மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என்ற இடம்பெறும் என திண்டுக்கல் ஐ லியோனி சற்றுமுன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மீண்டும் பாஜக தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் ஐ லியோனி மேலும் கூறியபோது, ‘ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பெரும்பாலானோர் தற்போது பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். தொலைக்காட்சி செய்திகளிலும் ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். எனவே அடுத்த கல்வி ஆண்டு முதல் பாடப் புத்தகங்களிலும் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்த பாடநூல் நிறுவனம் அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் என்றும் திண்டுக்கல் ஐ லியோனி கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version