இந்தியா

39 ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்கள்: இடம் மாறிய கல்லீரல்

Published

on

39 ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் கல்லீரல் தானம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பெரியாறு ஊராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 39 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தாங்கள் படித்த அதே பள்ளியில் சந்திக்க முடிவு செய்தனர்.

கடந்த 1983-ஆம் ஆண்டு எஸ்எஸ்எல்சி படித்த மாணவர்களின் சந்திப்பு மீண்டும் சமீபத்தில் நடந்தது. இந்த சந்திப்பில் 50 முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ரகுநாதன் என்பவருக்கு கல்லீரல் பாதிப்பு இருந்ததால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரியவந்தது .

இதனை அடுத்து ஐந்து நண்பர்கள் தங்களுடைய கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்களது கல்லீரல் ரகுநாதனுக்கு பொருந்தவில்லை. இதனை அடுத்து முன்னாள் மாணவர்களில் ஒருவரான சுரேஷின் மனைவி தன்னுடைய கல்லீரலை தானமாக கொடுக்க முன் வந்தார் .

அவருடைய கல்லீரல் ராமநாதனுக்கு சரியாக பொருந்தும் என தெரிந்ததும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும் இருவருமே நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மனிதநேயத்தின் உச்சகட்டமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ள நிகழ்வு அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

 

seithichurul

Trending

Exit mobile version