சினிமா செய்திகள்

வெங்கட்பிரபுவுக்கு இப்படி ஒரு கெட்ட பெயரா? ’மாநாடு’ தயாரிப்பாளர் அதிர்ச்சி!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் பலர் பெரிய பட்ஜெட்டில் திரைப்படங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் குறைந்த பட்ஜெட்டில் ஓடிடிக்காக ஆந்தாலஜி படங்களையும் வெப்தொடர்களை இயக்கி வருகின்றனர். அவர்கள் ஓடிடிக்காக இயக்கிவரும் பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்பதால் அவர்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் ’மாநாடு’ படத்தின் பட்ஜெட் மிக பிரம்மாண்டமானது என்பதும் இந்த படத்திற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மிகப் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’லைவ் டெலிகாஸ்ட்’ என்ற ஓடிடி திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஹாட்ஸ்டாரில் இதுவரை வெளியான தொடர்களில் லைவ் டெலிகாஸ்ட் தான் மிகவும் குறைந்த பார்வையாளர்களை பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளது.

ஏற்கனவே இந்த திரைப்படம் ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் படத்தில் எந்தவிதமான த்ரில், சஸ்பென்ஸ் இல்லை என்றும் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி உட்பட முக்கிய நட்சத்திரங்கள் இருந்தும் படம் சுத்தமாக பொது மக்களிடையே எடுபடவில்லை என்று கூறப்படுகிறது

’லைவ் டெலிகாஸ்ட்’ படத்தின் தோல்வி மாநாடு படத்தின் தயாரிப்பாளரை மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு இயக்குனரை நம்பி மிகப் பெரிய தொகையை முதலீடு செய்துள்ளோம். ஆனால் அவர்கள் ஓடிடியில் தொடர்களை இயக்கி தங்கள் பெயரை கெடுத்து கொடுத்துக் கொண்டிருப்பதால் எங்களுடைய படத்திற்கும் எதிர்பார்ப்பு குறைகிறது என்று வருத்தத்துடன் அவரது தரப்பு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version