தமிழ்நாடு

லிவிங் டுகெதர் வாழும் தம்பதிகளுக்கு இந்த உரிமை கிடையாது: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published

on

 திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் என்ற பெயரில் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்கு எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நீதிமன்றத்தை நாட எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது
கோவையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் ஜோசப் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்ததாகவும், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஜோசப்பை பிரிந்து தனியாக வசித்து வந்ததால் தன்னை ஜோசப்புடன் சேர்த்து வைக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்
ஆனால் தனக்கும் கலைச்செல்விக்கும் இடையே திருமணம் நடைபெறவில்லை எனக்கூறி அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் ஜோசப் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கலைச்செல்வி அளித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலைச்செல்வி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பண பரிவர்த்தனை தொடர்பாக முன்விரோதம் காரணமாக கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதாகவும், அதனால் அவரை மனுவை தள்ளுபடி செய்து செய்வதாகவும் உத்தரவிட்டனர்.
மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததால் தங்களுக்குள் எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நீதிமன்றத்தை நாட எந்தவிதமான சட்டப்பூர்வமான உரிமையும் இல்லை என தன்னுடைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர்

Trending

Exit mobile version