வணிகம்

காஷ்மீரில் கிடைத்துள்ள லித்தியம்.. தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசு.. போட்டி போடுபவர்கள் யார் யார்?

Published

on

இந்தியாவின் முதல் லித்தியம் இருப்பு ஜம்மு காஷ்மீரில் கண்டறியப்பட்டுள்ளது என சுரங்கத்துறை செயலாளர் அமித் சர்மா அண்மையில் தெரிவித்து இருந்தார்.

இப்போது இந்த லித்தியம் இருப்பை தோண்டி எடுப்பதற்கான சுரங்க ஏலத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Lithium

காஷ்மீரில் கிடைத்துள்ள இந்த லித்தியம், உலகத் தரம் வாய்ந்தது எனவும் இருப்பதிலேயே அதிகபட்சமாக 5.9 டன் லித்தியம் வரை இங்கு கண்டிரியப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த லித்திய சுரங்கத்தை ஏலம் எடுக்க இந்த ஆண்டு, ஜூன் மாதம் முதல் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் காஷ்மீரில் இந்த லித்தயம் சுரங்கத்தை தோண்டி, அவற்றைச் சுத்தம் செய்து வழங்கும்.

இந்த லித்தியமை பயன்படுத்தி பேட்டரி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைச் செய்யும்.

World’s Best Quality Lithium Reserve Fund In Jammu and Kashmir

தற்போது உலகின் 75 சதவிகித லித்தியம் தேவையைச் சீனா பூர்த்தி செய்து வரும் நிலையில், இங்கு இருந்து லித்தியம் எடுக்கப்பட்டால் அது அதில் பெரும் பங்கு இந்தியாவிற்குக் கிடைக்கும் என கூறப்படுகிறது.

லித்தியம் சுரங்கத்தை ஏலம் எடுக்க டாடா, வேதாந்தா, அதானி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இடையில் கடுமையான போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version