பிற விளையாட்டுகள்

பார்ஸிலோனா அணியில் இருந்து விலகும் மெஸ்ஸி: முடிவுக்கு வரும் 21 ஆண்டுகால பயணம்

Published

on

உலகின் நம்பர் ஒன் கால்பந்து வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா அணியிலிருந்து விலக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது

உலக புகழ்பெற்ற கால்பந்து வீரரான மெஸ்ஸி, பார்சிலோனா அணியில் இருந்த போது பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் பார்சிலோனா அணியில் தொடர வேண்டும் என ரசிகர்கள் விரும்பிய நிலையில் பார்சிலோனா அணிக்கும் மெஸ்ஸிக்கும் இடையே மீண்டும் தொடர்வதற்கான ஒப்பந்தம் தயாரானது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை என்றும் பார்சிலோனா அணி நிர்வாகிகளுக்கும் மெஸ்ஸிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்பட்டது

பார்சிலோனா அணிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் கட்டமைப்பு விதிமுறைகள் மெஸ்ஸியை மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் பார்சிலோனா அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் இனி தொடர மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து பார்சிலோனா அணிக்கு மெஸ்ஸி இனிமேல் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் நடந்த கோபா அமெரிக்க கால்பந்து போட்டியின்போது பொலிவியா அணிக்கு எதிராக மெஸ்ஸி மிக அபாரமாக விளையாடி புதிய சாதனை செய்தார் என்பதும் பொலிவிய அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்த உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதாகும் கோல் மெஷின் என்று கூறப்படும் மெஸ்ஸி தனது தாய்நாடான அர்ஜென்டினா அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version