விளையாட்டு

பார்சிலோனா அணியிலிருந்து விலகிய மெஸ்சி பிஎஸ்ஜி அணியில் இணைந்தார்!

Published

on

உலகப்புகழ் பெற்ற கால்பந்து ஆட்ட வீரர் லியோனெல் மெஸ்சி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார்.

சுமார் 21 ஆண்டுகள் பார்சிலோனா கால்பந்தாட்ட க்ளப்-க்காக விளையாடிய மெஸ்சி இனி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. பிஎஸ்ஜி என்பது பாரீஸ் செயின்ட் ஜெர்மணி கால்பந்தாட்ட க்ளப் அணி. நிதி மற்றும் கட்டமைப்பு வசதிகளைக் காரணமாகக் கூறி 21 ஆண்டுகள் விளையாடிய பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி விலகி உள்ளார்.

புதிதாக பாரீஸ் செயின்ட் ஜெர்மணி அணியுடன் 2 ஆண்டுகால ஒப்பந்தம் போட்டுள்ளார் மெஸ்சி. மெஸ்சி ரசிகர்கள் இனி அவர் விளையாடுவாரா மாட்டாரா அல்லது எப்போது அடுத்த அணியில் விளையாடுவார் எனக் காத்துக் கொண்டு இருந்தனர். மெஸ்சி ரசிகர்கள்தான் பார்சிலோனா ரசிகர்களாக இருந்தனர். அதனால், மெஸ்சி அடுத்து ஏதோ ஒரு அணிக்கு விளையாடுவார் என்ற அறிவிப்பே அவரது ரசிகர்களைக் குஷிபடுத்தி உள்ளதாக சமுக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Trending

Exit mobile version