உலகம்

வேலை தேட உதவும் நிறுவனத்திலேயே வேலைநீக்கம்.. என்ன கொடுமை இது?

Published

on

உலகெங்கும் உள்ள பல நிறுவனங்களில் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய புலம்பல்களை லிங்க்ட்-இன் சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் நிலையில் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமே ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக், டுவிட்டர், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கடந்து சில மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்தது என்பதும் குறிப்பாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து சுமார் ஒரு லட்சம் பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

linkedin

இந்த நிலையில் பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை அடுத்து லிங்க்ட்-இன் நிறுவனம் தற்போது வேலை நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய அடுத்த வேலைக்காக லிங்க்ட்-இன் சமூக வலைதளத்தில் தான் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து வருவார்கள். இதில் பதிவு செய்தால் உடனடியாக அடுத்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

ஆனால் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமே வேலை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிங்க்ட்-இன் நிறுவனத்தில் எத்தனை ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியவில்லை என்றாலும் வேலை நீக்கம் செய்யப்பட்ட பலர் தங்களது பதிவை செய்து வருகின்றனர். இதில் இருந்து லிங்க்ட்-இன் நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் கடந்த 25 வருடங்களாக லிங்க்ட்-இன் நிறுவனத்தில் வேலை செய்தேன் என்றும் இப்போது திடீரென வேறு ஒரு நிறுவனத்தின் முதலாளியை தேடுவது என்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றும் லிங்க்ட்-இன் நிறுவனத்தில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவர் அறிவித்துள்ளார்.

லிங்க்ட்-இன் நிறுவனத்தின் அக்யூஷன் இன்ஜினியரிங் மூத்த மேலாளராக இருந்த ஒருவர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதாக மெயில் வந்து இருப்பதாகவும் இது தனக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமேசான், கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் வேலை நீக்க பட்டியலில் இடம்பெற்ற நிலையில் தற்போது லிங்க்ட்-இன் நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version