உலகம்

யூடியூப் போல் பணம் சம்பாதிக்கலாம்: இன்ஸ்டாகிராமில் அதிரடி அறிவிப்பு!

Published

on

யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்களும் இனி சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யூடிபில் ஒரு கணக்கு தொடங்கி அதில் வீடியோவை பதிவு செய்தால் அதில் கிடைக்கும் பார்வையாளர்களை பொருத்து பணம் சம்பாதிப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் யூடியூபில் கணக்குகளை தொடங்கி ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூப் போலவே இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்கும் ஆப்ஷன் வர உள்ளது. இன்ஸ்டாவில் யூடியூப் போலவே சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷன் வரவுள்ளதாகவும் இதற்கான சோதனை முயற்சி தற்போது நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த அப்டேட் பயனாளிகளுக்கு அறிவிக்கப்படும் என்றும் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்தால் அது சப்ஸ்கிரைபர்களுக்கு சென்றடையும் என்றும் அதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யூடிபில் போலவே இனி இன்ஸ்டாகிராமில் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்பு பயனாளிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. இருப்பினும் ஆரம்பத்தில் அமெரிக்காவில் மட்டுமே பணம் சம்பாதிக்கும் முறை பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பிறகு இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் இந்த அப்டேட் வரும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version