இந்தியா

அப்பாவை போன்று தொடர்ந்து 4வது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்ற அசாதுதீன் ஒவைசி!

Published

on

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடியுள்ளார்.

மக்களவை 2019 தேர்தலில் அசாதுதீன் ஒவைசி பாஜகவின் பகவந்த் ராவ்-ஐ எதிர்த்து ஹைதரபாத் தொகுதியில் 2,82,186 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

அசாதுதீன் ஒவைசியின் அப்பா சுல்தான் சலாஹுதின் ஒவைசி
, இதே தொகுதியில் 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அதன் பிறகு ஹைதராபாத் தொகுதியில் 2004-ம் ஆண்டு முதல் முறையாகப் போட்டியிட்ட அசாதுதீன் ஒவைசி தனது அப்பாவை போன்றே வெற்றிபெற்றார்.

பின்னர் 2009 மற்றும் 2014 தேர்தல்களிலும் அசாதுதீன் ஒவைசி போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது மீண்டும் 2019-ம் ஆண்டும் ஹைதராபாத் தொகுதியில் வெற்றிபெற்று பாஜகவுக்குச் சிம்ம சொப்பமனாக உள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version