பர்சனல் ஃபினான்ஸ்

எல்ஐசியின் மாதம் ரூ.10,000 பென்ஷன் அளிக்கும் திட்டம் பற்றி தெரியுமா?

Published

on

மூத்த குடிமக்கள் மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் பெறும் வகையில், எல்ஐசியில் பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டம் உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்குக் குறைந்தது மாதம் 1000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும்.

குறைந்தபட்ச வயது: 60 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்
அதிகபட்ச வயது: வரம்பு ஏதும் இல்லை
பாலியின் கால வரம்பு: 10 வரடங்கள் வரை பென்ஷன் பெற முடியும்.

வெற்றிகரமாக 10 வருடங்கள் பென்ஷன் பெற்று முடித்துவிட்டால், கடைசி மாதம் பென்ஷன் பெரும்போது முதலீட்டு தொகையும் திரும்ப கைக்கு வந்துவிடும். பென்ஷன் தொடர்ந்து வேண்டும் என்றால், மீண்டும் முதலீடு செய்து 10 வருடங்களுக்கு முதலீடு செய்துகொள்ளலாம். அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் இறக்கும் வரை 10 வருடங்களுக்கு ஒரு முறை முதலீடு செய்து பென்ஷன் பெற முடியும்.

10 வருடங்கள் பென்ஷன் காலம் முடியும் முன்பு இறந்துவிட்டால், முதலீடு செய்த தொகை பாலிசிதாரரின் வாரிசிடம் ஒப்படைக்கப்படும்.

பென்ஷன் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு அல்லது முழு ஆண்டு தவணையாக நமது தேவைக்கு ஏற்ப பெற முடியும். அதற்கு ஏற்றவாறு முதலீட்டு தொகை குறையும், அதிகரிக்கும்.

மாத பென்ஷன் திட்டம்

10 வருடங்களுக்கு மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெற 1,50,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக மாதம் 10,000 ரூபாய் பென்ஷன் வேண்டும் என்றால் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

காலாண்டு பென்ஷன் திட்டம்

3 மாதத்துக்கு ஒரு முறை பென்ஷன் தொகை வந்தால் போது என்றால், 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற 1,49,068 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 10,000 ரூபாய் என்றால் 14,90,683 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

அரையாண்டு பென்ஷன் திட்டம்

6 மாதத்துக்கு ஒரு முறை பென்ஷன் தொகை வந்தால் போது என்றால், 6 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற 1,47,601 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 10,000 ரூபாய் என்றால் 14,76,015 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

ஆண்டு பென்ஷன் திட்டம்

12 மாதத்துக்கு ஒரு முறை பென்ஷன் தொகை வந்தால் போது என்றால், 12 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற 1,44,578 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 10,000 ரூபாய் என்றால் 14,45,783 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.

இந்த பென்ஷன் தொகை அனைத்தும் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

ஒருவேலை முதிர்வு காலத்தின் இடையில் வெளியேற விரும்பினால் 98 சதவீத முதலீட்டுத் தொகையை மட்டும் திரும்பப்பெறலாம். ஒருவேலைக் கடன் தேவைப்பட்டால் 10 சதவீத வட்டி விகிதத்தில் 75 சதவீத தொகையைப் பெறலாம். கடன் தவணை செலுத்தும் முன் திட்டம் முதிர்வடைந்தால் மீதம் உள்ள கடன் தொகை பிடித்தம் செய்யப்பட்டு முதலீட்டுத் தொகை திரும்ப ஒப்படைக்கப்படும்.

வரி விகிதங்கள் அரசின் விதிகளுக்கு இணங்க பிடித்தம் செய்யப்படும்.

seithichurul

Trending

Exit mobile version