வணிகம்

தினம் ரூ.160 சேமித்தால் 25 ஆண்டுகளில் ரூ.23 லட்சம்! எப்படி?

Published

on

LIC Policy: எல்ஐசி உலகிலேயே அதிக பாலிசிகளைக் கொண்ட நிறுவனம். அரசின் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு முதற்பெரும் பங்களிப்பைச் செய்துவரும் நிறுவனம். இந்தியாவின் பங்குச்சந்தை நிலைகுலையும்போதெல்லாம் அதைத் தாங்கிப்பிடிக்கும் நிறுவனம். அவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம், 1991-க்குப் பின்னர், எல்லாப் பொதுத் துறை நிறுவனங்கள் மீதும் கடும் விமர்சனங்களை வைப்பவர்கள்கூட புருவம் உயர்த்தி அண்ணாந்து பார்க்கும் நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது என்பதுதான்.

குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவதற்கான எல்ஐசியின் சூப்பர் திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

ரூ.2,400 கோடி ரூபாய் முதலீடு.. தமிழகத்தில் உலகின் மிகப் பெரிய ஸ்கூட்டர் ஆலை.. ஓலா அதிரடி!

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற எல்ஐசி மணி பேக் பிளான் (Money Back Plan) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் பணம் திரும்பக் கிடைக்கும். மேலும் மெச்சூரிட்டி முடிவில் நல்ல வருமானம் கிடைக்கும். இத்துடன் வரிச் சலுகைகளும் இருக்கின்றன.

இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டம். இதில் நல்ல வருமானமும், போனஸும் உறுதியாக கிடைக்கும். 20 ஆண்டுகள், 25 ஆண்டுகள் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த பாலிசிக்கு வரி விதிக்கப்படாது. வட்டி தொகை, பிரீமியத் தொகை, மெச்சூரிட்டி தொகை ஆகியவற்றுக்கு வரி விதிக்கப்படாது. இந்த திட்டத்தில் 25 ஆண்டு பாலிசியில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். தினமும் 160 ரூபாய் சேமித்து முதலீடு செய்தால், 25 ஆண்டுகள் முடிவில் உங்களுக்கு 23 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதற்கு வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகள் முதலீட்டில், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளின் இறுதியிலும் 15 முதல் 20 விழுக்காடு பணம் உங்களிடம் திருப்பிக் கொடுக்கப்படும். எனினும், குறைந்தபட்சம் 10% பிரீமியம் டெபாசிட் செய்தபிறகே இவ்வகையில் பணம் திரும்பக் கிடைக்கும்.

Trending

Exit mobile version