பங்கு சந்தை

எல்.ஐ.சி சந்தை மூலதனம் 1.7 லட்சம் கோடி ரூபாய் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம்!

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய ஐபிஓ என 21,000 கொடி ரூபாய் நிதியைத் திரட்டி மே 17-ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது எல்.ஐ.சி.

பங்குச்சந்தயில் பட்டியில்படப்பட்ட போது எல்.ஐ.சி சந்தை மூலதனம் மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் என இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய சந்தை மூலதனம் படைத்த நிறுவனமாக எல்.ஐ.சி இருந்தது.

ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாள் முதலே நட்டத்தை அளித்து வந்த எல்.ஐ.சி பங்குகள் இன்றுடன் சேர்த்து 1.7 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.

இன்றைய சந்தை நேர முடிவில் புதிய சரிவை சந்தித்த எல்.ஐ.சி பங்குகள் 5.85 சதவீதம் சரிந்து 668.20 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

இதுவரையில் எல்.ஐ.சி பங்குகள் 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version