பர்சனல் ஃபினான்ஸ்

மாதம் ரூ.1 லட்சம் பென்சன் வேண்டுமா? எல்.ஐ.சியின் இந்த பாலிசியை எடுங்கள்..!

Published

on

தற்போது அரசு ஊழியர்கள் தவிர வேறு யாருக்குமே பென்ஷன் இல்லை என்பதால் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு பென்ஷன் வேண்டும் என்று நினைத்தால் எல்ஐசியின் ஜீவன் சாந்தி யோஜனா என்ற திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பிறகு பென்ஷனை பெற்று நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று கூறப்படுகிறது.

எல்ஐசி ஜீவன் சாந்தி யோஜனா என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி மாதம் தோறும் அல்லது காலாண்டு அல்லது அரையாண்டு அல்லது ஒரு ஆண்டுக்கு ஒருமுறை பென்ஷன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலிசியின் குறைந்தபட்ச முதலீடு 1.5 ரூபாய் என்றும், அதிகபட்சம் என்பது வரைமுறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவன் சாந்தி யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியமாக மாதம் ஒரு லட்சம் வரை பெறலாம் என்று எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. உங்களுடைய வருடாந்திர வருமானத்தை பொறுத்து நீங்கள் இதில் முதலீடு செய்யும் தொகையை தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் அதிகபட்ச மாதாந்திர பென்ஷனை விரும்பினால் அதிகபட்சமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் ஒரு லட்சம் ஓய்வூதியின் பெற வேண்டுமானால் 12 ஆண்டுகளுக்கு ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 12 ஆண்டுகளுக்கு பிறகு மாதம் ஒரு லட்சம் பென்ஷனாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 12 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகள் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு ஓய்வு அதிகமாக 94 ஆயிரத்து 840 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதம் 50,000 ரூபாய் ஓய்வூதியம் தேவை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் 50 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். 12 ஆண்டுகள் முதலீடு செய்தால் மாதம் ரூ.53,460 என ஒவ்வொரு மாதமும் பென்ஷன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் சேருவதற்கு 30 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது முதல் அதிகபட்சமாக 79 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். பென்ஷன் பணத்தை மாதம், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தங்களுடைய வசதிப்படி பென்ஷன் திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தரவாதமாக பென்ஷன் வழங்கும் திட்டம் என்பதால் பலர் இந்த திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version