வணிகம்

எல்.ஐ.சி ஐபிஓ பங்கு எவ்வளவு? பாலிசிதாரர்களுக்கு எவ்வளவு சலுகை!

Published

on

எல்.ஐ.சி ஐபிஓ விரைவில் வெளியாக இருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில் இதற்கு எல்ஐசி ஊழியர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் எதிர்ப்பையும் மீறி இன்னும் ஒரு சில நாட்களில் எல்ஐசி ஐபிஓ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எல்ஐசி ஐபிஓ விலை நிர்ணயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

எல்.ஐ.சி ஐபிஓ ரூ.902 முதல் 949 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எல்ஐசி நிறுவனத்தின் பாலிசி எடுத்தவர்கள் 60 ரூபாயும் எல்ஐசி ஊழியர்களுக்கு 45 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1.7 லட்சம் கோடியை எல்.ஐ.சி ஐபிஓ மூலம் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக கூறப்பட்டாலும் இந்த ஐபிஓ வெளியானதும் தான் எவ்வளவு திரட்டப்படும் என்பது குறித்த தகவல் தெரிய வரும்.

seithichurul

Trending

Exit mobile version