வணிகம்
அதானி குழுமத்தில் மட்டும் ரூ.87,380 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள எல்ஐசி!
இந்தியாவின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி அதானி குழும நிறுவனங்களில் மட்டும் 87,380 கோடி ரூபாய் முதலீடுகளைச் செய்துள்ளது.
அதிகபட்சமாக அதானி எரிவாயு நிறுவனத்தில் 24 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீட்டை எல்ஐசி செய்துள்ளது.
தொடர்ந்து அதானி போர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 18 ஆயிரத்து 400 கோடி ரூபாயை எல்ஐசி முதலீடு செய்துள்ளது.
அதானி எண்டர்பிரைசசில் 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 12 ஆயிரத்து 600 கோடி ரூஆய், அதானி சிமெண்ட் நிறுவனத்தில் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய், அதானி ரெனிவபல்ஸ் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய், ஏசிசி நிறுவனத்தில் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் முதலீட்டை எல்ஐசி செய்துள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் கடந்த 8 ஆண்டுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து நிலையில், எல்ஐசி அதில் பெரும் முதலீட்டைக் குவித்துள்ளது.
மறுபக்கம் மாருதி சுசூகி, பவர் கிரிட், சன் பார்மா, என்டிபிசி, இந்துஸ்தான் யூனிலீவர், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், சைமென்ஸ், பிரிட்டானியா, பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களிலிருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை கடந்த ஒரு காலாண்டில் வெளியில் எடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.